ராமநாதபுரம் அருகே கார் – வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 3 பேர் உயிரிழந்த சோகம்!

ராமநாதபுரம் அருகே கார் மீது டெம்போ ட்ராவலர் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து மதுரைக்கு ஆம்னி கார் சென்று கொண்டிருந்தது. தபால் சாவடி…

ராமநாதபுரம் அருகே கார் மீது டெம்போ ட்ராவலர் வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்து மதுரைக்கு ஆம்னி கார் சென்று கொண்டிருந்தது. தபால் சாவடி அருகே சென்றபோது, கர்நாடகாவில் இருந்து வந்த டெம்போ ட்ராவலர் வேன் நிலைதடுமாறி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply