முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா தடுப்பூசி – கோவை முதலிடம்; அமைச்சர்

தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில், முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தியதில், கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 2ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிரமணியம், ஒன்றிய அரசு உதவியுடன் கோவையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 2 பிராணவாயு அலகு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், 3வது அலையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாகவும், கேரளாவில் தொற்று அதிகரிப்பதால், எல்லைப் பகுதியில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கேரள எல்லைப்பகுதியான மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் 2ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 15 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரத்து 900 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், கோவை மாவட்டத்தில் மட்டும் 13 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

Advertisement:
SHARE

Related posts

தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு இடையே உள்ள ஒற்றுமைகள்

Ezhilarasan

டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசுகிறார் முதலமைச்சர் பழனிசாமி!

Saravana

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Halley karthi