முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

கடைசிநாள் படப்பிடிப்பில் ’ஜேம்ஸ்பாண்ட்’ கண்ணீர்

’நோ டைம் டு டை’ என்ற படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பில் உருக்கமாக பேசிய டேனியல் கிரேக் கண்ணீர்விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் எராளமான ரசிகர்கள் உள்ளனர். இது வரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகி வசூலை குவித்துள்ளது. இன்னும், அதிரடி பாண்டுக்கு ஓய்வில்லை. தொடர்ந்து அவர் நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், 25 வது பாண்ட் படமான ’நோ டைம் டு டை’ (No Time to Die) படத்தில் டேனியல் கிரேக், பாண்ட் கேரக்டரில் நடிக்கிறார். இதற்கு முன் கேசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைஃபால் உட்பட நான்கு பாண்ட் படங்களில் நடித்துள்ள கிரேக் நடிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி பாண்ட் படம் இது. ’இனி ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அவர் ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்தப் படத்தை கேரி ஜோஜி புகுனகா (Cary Joji Fukunaga) இயக்கியுள்ளார். ராமி மலேக், லீசெய் டவுக்ஸ், லசானா லிஞ்ச் உட்பட பலர் நடிக்கின்றனர். கொரோனா காரணமாக தள்ளிப் போன இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்துள்ளது. இதன் கடைசி நாள் படப்பிடிப்பில் படக்குழுவினருடன் பேசினார் டேனியல் கிரேக் . அப்போது அவர் கண்ணீர் விட்டு உருக்கமாக பேசி விடைபெற்றுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தப் படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

Advertisement:
SHARE

Related posts

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வெற்றிக்கொடி நாட்டிய காங்கிரஸ்!

Niruban Chakkaaravarthi

ரஜினியின் கட்சி பெயர் மக்கள் சேவை கட்சி? ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு!

Jayapriya

மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

Halley karthi