ஐதராபாத் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபட்டு வருகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து இன்றைய போட்டியில் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக படிக்கல் 11 ரன்னில் வெளியேறினார்.
அவரை அடுத்து வந்த ஷபாஸ் அகமது 14 ரன்களில் வெளியேற அடுத்து வந்த மேக்ஸ்வெல் அதிரடி காட்டி அணியை சரிவில் இருந்து மீட்டார். இருப்பினும் ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணமே இருந்தன. அணியின் கேப்டன் விராட் கோலி 33 ரன்களில் வெளியேற பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரிகளில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59 ரன்களும் விராட் கோலி 33 ரன்களும் சேர்த்தனர்.







