மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணம்; நீதிமன்றம் அறிவுறுத்தல்

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண…

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்குவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது குறித்த வழக்கு விசாரணை இன்று தலைமை நீதிபதி அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. இதில், மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் சென்றடைந்ததாக தெரியவில்லை என்றும், மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி கவனம் செலுத்தவும் தமிழ்நாடு அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியது.

அதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக திட்டம் ஒன்றை மாநில அரசு வகுத்து அடுத்த விசாரணையின் போது அரசுத்தரப்பில் தாக்கல் செய்ய அறிவுறுத்தி வழக்கு விசாரணையை செப்டம்பர் 23 ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.