முக்கியச் செய்திகள் தமிழகம்

இரண்டாவது நாளாக 1,000க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இரண்டாவது நாளாக இன்றும் கொரோனா தொற்று ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை27,04,586 ஆக உயர்ந்துள்ளது. பல நாட்களுக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக 1000க்கும் கீழ் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,157 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,114 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,57,282 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 11,147 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களில், சென்னை மற்றும் கோவையில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 109 பேருக்கு தொற்றுப் பாதித்துள்ளது. 135 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். கோயமுத்தூரில் 114 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 129 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி: மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

Vandhana

சிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்

Saravana Kumar

பெற்றோர் கண்டித்ததால் வீட்டில் இருந்து பணத்தையும் நகையையும் எடுத்துக் கொண்டு மாயமான சிறுவன்

Halley Karthik