தீபாவளி பண்டிகைக்காக பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னையிலிருந்து 20,334 பேருந்துகள் இயக்க தயார் நிலையில் உள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நவ.4 மற்றும் நவ.5ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துதுறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் துறை அதிகாரிகளும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “சென்னையிலிருந்து 20,334 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது. அதேபோல ஊரில் இருந்து திரும்பி வருவதற்கு 17,719 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிக கட்ணம் குறித்து புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுத்து வாகனம் பறிமுதல் செய்யப்படும்” என்று கூறினார்.
முன்னதாக பேருந்தின் உள்ளே ஏரி பயணிகளின் குறை நிறைகளை கேட்டறிந்து, உதவி மையங்களின் செயல்பாடுகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
1,70,218 பேர் இதுவரை சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் வாயிலாக பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் நீடித்து வருகிறது.








