கோரமண்டல் விரைவு ரயில் விபத்து நிகழ்ந்தது எப்படி? விவரித்த தஞ்சை பயணி!

கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த வெங்கடேசன் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல்…

கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த வெங்கடேசன் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம்  பஹனகா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது  சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன.

தடம்புரண்ட ரயிலின் பெட்டிகள் அருகில் உள்ள தண்டாவாளத்தில் விழுந்த கிடந்ததில் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்தபூர் – ஹவுரா விரைவு ரயில் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியது. இதனால் யஷ்வந்த்பூர் ரயிலின் மூன்று பெட்டிகள் தடம்புரண்டன. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோரமண்டல் விரைவு ரயிலில் பயணம் செய்த தஞ்சாவூரைச் சேர்ந்த வெங்கடேசன் இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் கூறியதாவது, “டெல்லியில் இருந்து வந்த துரந்தோ அதிவிரைவு வண்டி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு வண்டி நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த இரு ரயிலுக்கிடையே சரக்கு ரயில் இடையே வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்களும் சேர்ந்து தான் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த விபத்தில் சாதாரண பெட்டியில் இருந்த யாரும் உயிர்பிழைக்கவில்லை, எல்லோரும் உயிரிழந்துள்ளனர்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.