கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளோம்: பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்பாக தமிழகம் உள்பட மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். தடுப்பூசி போடும் பணி வரும் 16-ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு…

கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்பாக தமிழகம் உள்பட மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

தடுப்பூசி போடும் பணி வரும் 16-ம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றதாக தெரிவித்தார். சுகாதாரப்பணியாளர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவித்தார். மேலும் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்படும் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply