குன்னூர் – உதகை மலை ரயில் இன்று ரத்து

நீலகிரி மாவட்டம், குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மலை ரயில் பாதையில் கெட்டி – லவ்டேல் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதையின்…

நீலகிரி மாவட்டம், குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மலை ரயில் பாதையில் கெட்டி – லவ்டேல் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதையின் குறுக்கே மரம் விழுந்ததால் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மரத்தை அகற்றி பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ரயில் எண்.06141 குன்னூர் – உதகமண்டலம் பயணிகள் சிறப்பு ரயில், குன்னூரில் இருந்து 07.45 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டது, ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்.06139 உதகமண்டலம் – குன்னூர் பயணிகள் சிறப்பு ரயில், உதகமண்டலத்தில் இருந்து 09.15 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டது, ரத்து செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.