தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தருமபுர ஆதீன மடத்தில் கயிலை ஞானபிரகாசரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும். விழாவின் பத்தாம் நாளில்…

மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தருமபுர ஆதீன மடத்தில் கயிலை ஞானபிரகாசரின் குருபூஜை விழா ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும். விழாவின் பத்தாம் நாளில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி தருமபுர ஆதீனம் ஆபரணங்கள் அணிந்த நிலையில், சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார்.

தொடர்ந்து, 70 பேர் பல்லக்கை தோளில் சுமந்து சென்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், பல்லக்கில் அமர்ந்து தருமபுரம் ஆதீனம் வீதியுலா சென்றார். ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் ஆதீனத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தொடர்ந்து, ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளிய ஆதீனம், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

முன்னதாக பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனிதனை மனிதன் தூக்கி செல்வது மனித உரிமை மீறல் என்று கூறி திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை
சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தருமபுரம் ஆதினத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.