இமாச்சல பிரதேசத்தில் தொடர் மழை: நிலச்சரிவில் சிக்கி 53 பேர் பலி!

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 53 பேர் பலியாகியுள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கான ரெட்…

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 53 பேர் பலியாகியுள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மழை, நிலச்சரிவில் சிக்கி இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினம் எளிய விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், எந்த கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெறவில்லை என்றும் கூறினார். போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவர் கூறினார். சண்டிகர்-சிம்லா 4-வழி நெடுஞ்சாலை மற்றும் பிற சாலைகள் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சிம்லாவில் இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களிலிருந்து இதுவரை 14 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக 24 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் உள்ள இரவு நேர பாரடைஸ் முகாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் உயிரிழந்தார் .மேலும் நான்கு பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

டெஹ்ராடூன், பவுரி, தெஹ்ரி, நைனிடால், மற்றும் உதம் சிங் நகர் ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிஷிகேஷில் நாட்டிலேயே அதிக அளவு மழை பெய்துள்ளது. மாநிலத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காணாமல் போயுள்ளனர். பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி ஆகிய புனிதத் தலங்களுக்குச் செல்லும் சாலைகள் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக, சார்தாம் யாத்ரா என்று அழைக்கப்படும் புனித தலங்களுக்கான யாத்திரை இரண்டு நாட்களுக்கு நிறுத்தப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அதிகாரிகளுடன் உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். மேலும் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் அவர் ஆய்வு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.