தொடர் கனமழை | ராமேஸ்வரம் தீவு பகுதியில் பள்ளி விடுமுறை!

தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டி உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வரும் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு…

#SchoolLeave | Today (Oct 16) which districts have school holidays? Here is the list!

தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டி உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வரும் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.