#UttarPradesh-ல் ரயிலை கவிழ்க்க சதியா?… தண்டவாளத்தில் கிடந்த சிலிண்டரால் பரபரப்பு!

விடியற்காலை 6 மணிக்கு உபி. கான்பூர் – பிரக்யராஜ் செல்லும் சரக்கு ரயில் கடந்து போகும் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலிண்டரால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் காலியான காஸ் சிலிண்டரை கண்டு, சரக்கு…

விடியற்காலை 6 மணிக்கு உபி. கான்பூர் – பிரக்யராஜ் செல்லும் சரக்கு ரயில் கடந்து போகும் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட சிலிண்டரால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் காலியான காஸ் சிலிண்டரை கண்டு, சரக்கு ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் இன்று (செப்.,22) ப்ரேம்பூர் ஸ்டேஷனில் தண்டவாளத்தில், காலியான காஸ் சிலிண்டர் கிடந்துள்ளது. கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் வரை செல்லும் சரக்கு ரயில் அப்பகுதியில் வாயிலாக வந்தது. டிரைவர் உஷாராக செயல்பட்டு, ரயிலை நிறுத்தினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிகாரிகள் சிலிண்டரை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். சிலிண்டர் காலியாக இருந்துள்ளது. ரயிலை கவிழ்க்க சதி திட்டம் நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.