ரயில்வே கேட்டில் லாரி மோதி விபத்து

மதுரை அருகே ரயில்வே கேட் மீது லாரி மோதிய விபத்துக்குள்ளானது. இதனால் ரயில்கள் கடக்க முடியாமல் ரயில்வே நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட்டில் விவசாய அறுவடை…

மதுரை அருகே ரயில்வே கேட் மீது லாரி மோதிய விபத்துக்குள்ளானது. இதனால் ரயில்கள் கடக்க முடியாமல் ரயில்வே நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள கருவேலம்பட்டி ரயில்வே கேட்டில் விவசாய அறுவடை இயந்திரம் ஏற்றி வந்த லாரி மோதியதில் ரயில்வே தடுப்பு கம்பி குழாய் மின்சார ரயில் செல்வதற்காக போடப்பட்ட 25000 வோல்ட் மின் கம்பியில் உரசி நின்றது.

இதனால் ரயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது தொடர்ந்து மதுரை – செங்கோட்டை ரயில் திருப்பரங்குன்றத்திலும், குருவாயூர்- சென்னை ரயில் கள்ளிக்குடியிலும், நாகர்கோயில் -கோயம்புத்தூர் ரயில் திருமங்கலத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ஒரு மணி நேரம் போராடி மின் கம்பியில் உரசிய வாகன தடுப்பு கம்பியை அப்புறப்படுத்தி சீரமைக்கப்பட்டு வழக்கம்போல் ரயில்கள் செயல்படத் தொடங்கியது.

இந்த விபத்தினால் ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய வாகனம் சிரமத்துக்குள்ளானது இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.