தமிழக சட்டசபையில் மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்!

சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை அவை கூடியதும் முதலில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசித்தார். அதன்படி, மறைந்த திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் பாக்கியராஜ், கவிஞர் மற்றும் எழுத்தாளர் புவியரசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுருளிவேல், மறைந்த பின்னணி பாடகி ஜானகி, எழுத்தாளர் பூமணி உள்ளிட்டோர் மறைவுக்கு சட்டசபை சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் மறைந்த பிரபலங்களுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.