மதுரையில் யாசகத்தில் ஈடுபட்ட 10 குழந்தைகள் உட்பட 95 பேர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரை மாநகர் பகுதியில் சாலை சந்திப்புகள் மற்றும் சாலை ஓரங்களில் குழந்தைகள் யாசகம் எடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வெளியான தகவலை நியூஸ் 7 தமிழ் செய்தியாக ஒளிப்பரப்பியது. இதையடுத்து மதுரை மாநகர காவல் துறை, குழந்தைகள் நலக் குழவினருடன் இணைந்து OPERATION “NEW LIFE” என்ற பெயரில் 6 குழுக்களாக பிரிந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, யாசகத்தில் ஈடுபட்ட 10 குழந்தைகள், 50 ஆண்கள் மற்றும் 35 பெண்கள் என மொத்தம் 95 பேரை காவல்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகளை, காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்த காவல்துறையினர், மற்ற நபர்களிடம் யாசகம் பெறக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.







