அதிமுக அலுவலகம் தொடர்பான புகார்-சிபிஐ விசாரிக்க டிஜிபி அலுவலகத்தில் மனு

அதிமுக அலுவலக கலவரத்தின்போது, தலைமை அலுவலகத்தில் நுழைந்து பத்திரங்கள் பரிசு பொருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக…

அதிமுக அலுவலக கலவரத்தின்போது, தலைமை அலுவலகத்தில் நுழைந்து பத்திரங்கள்
பரிசு பொருட்கள் உள்ளிட்டவை திருடப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரிக்க
கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி
இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கிடையே மோதல் வெடித்தது. மோதல் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்து, 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் என 60 பேருக்கு கலவர வழக்கு தொடர்பாக, காவல் நிலைய விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கலவரத்தின்‌போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்து, அங்கு
வைக்கப்பட்டிருந்த பத்திரங்கள், பரிசு பொருட்கள், பல முக்கிய ஆவணங்கள்
ஆகியவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொள்ளையடித்து சென்று விட்டதாக கடந்த 23ஆம் தேதி அதிமுக கழக அமைப்புச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற
உறுப்பினரான சி.வி. சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் சி.வி. சண்முகம் அளித்த புகாரில் தற்போது வரை எந்த நடவடிக்கையும்
எடுக்காததால், அதிமுக அலுவலகத்தில் நுழைந்து பரிசு பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்த வழக்கு மற்றும் கலவர வழக்கு என இரண்டு வழக்கையும் சிபிஐ, அல்லது சிபிசிஐடி விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற கோரி சி.வி. சண்முகம் சார்பில் டிஜிபி அலுவலகம் மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.