“பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை”

பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்த  இரண்டு பேர் மீது மாநகராட்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சியின் பொதுக்கழிப்படத்தை…

பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்த  இரண்டு பேர் மீது மாநகராட்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் பொதுக்கழிப்படத்தை பயன்படுத்த கட்டணம் பெற்ற இரண்டு நபர்கள் மீது காவல்துறையில் மாநகராட்சி புகார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம் மண்டலத்தில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடமிருந்து கட்டணம் வசூலித்த 2 நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இராயபுரம் மண்டலம். வார்டு 59க்குட்பட்ட பிராட்வே பேருந்து நிலைய வளாகம் மற்றும் பிராட்வே பேருந்து நிலையம் எதிரில் மெட்ரோ இரயில் நிலையம் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்த 2 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது காவல்துறையில் புகார் பதியப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.