“கரெக்ட்டா ஃபூல்ஸ் டே அன்னைக்கு வந்துருக்கீங்க” | ரசிகர்களிடம் ஜாலியாக உரையாடிய அஜித்!

நடிகர் அஜித்குமார், தனது ரசிகர்களிடம் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.   தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய  ‘துணிவு’  திரைப்படம் ரசிகர்கள்…

நடிகர் அஜித்குமார், தனது ரசிகர்களிடம் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.  இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய  ‘துணிவு’  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இவர் கைவசம் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் உள்ளன.  இதில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.  இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார்.

அதேபோல் குட் பேட் அக்லி படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.  வருகிற ஜூன் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.  சினிமாவுக்கு வருவதற்கு முன்பே அவர் பைக் ரைடில் ஆர்வம் கொண்டவர்.   சினிமாவில் நடிக்க துவங்கிய போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடிகர் அஜித்குமார் பைக் ரைடு செய்து வந்தார்.  சில சமயம் அதில் அடிப்பட்டு சிகிச்சையும் எடுத்திருக்கிறார்.  முதுகில் சில அறுவை சிகிச்சைகளையும் செய்து கொண்டார்.

அதன்படி தற்போது அவர் பைக் ட்ரிப் மேற்கொண்டு வருகிறார்.  இந்த நிலையில்,  அவர் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணியாற்றும் ரசிகர்களை நேற்று (ஏப்.1) சந்தித்தார்.  அப்போது, சிலர் அவரிடம் கையொப்பம் பெற்றனர்.  இதனையடுத்த நடிகர் அஜித் “கரெக்ட்டா ஃபூல்ஸ் டே அன்னைக்கு வந்துருக்கீங்க” எனக் கிண்டலாகக் கூறினார்.  இதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/CinemaWithAB/status/1775047234385580086?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1775047234385580086%7Ctwgr%5Eb72b0bfd1d33c7cbac9ec80bdf517c8328c5d161%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2024%2FApr%2F02%2Factor-ajithkumar-new-video

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.