“எனக்கு பிரச்சாரம் செய்ய வந்து விடுங்கள்” : பள்ளி விழாவில் மாணவிகளின் பேச்சு திறமையை பாராட்டிய அமைச்சர் மெய்யநாதன்!

ஆலங்குடியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி விழாவில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், மாணவிகளின் பேச்சுத் திறைமையை கண்டு அடுத்த தேர்தலில் எனக்கு பிரச்சாரம் செய்ய வந்துவிடுங்கள் என நகைச்சுவையாகப் பேசினார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசினர் மகளிர்…

ஆலங்குடியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி விழாவில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன், மாணவிகளின் பேச்சுத் திறைமையை கண்டு அடுத்த தேர்தலில் எனக்கு பிரச்சாரம் செய்ய வந்துவிடுங்கள் என நகைச்சுவையாகப் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

முதலில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றியும் மேடையில் பாட்டுப்பாடியும், பேச்சுத்திறமையை வெளிப்படுத்தியும் மாணவிகள் அமைச்சரை வரவேற்றனர். மாணவிகள் அனைவரையும் பொன்னாடை போர்த்தி அமைச்சர் மெய்யநாதன் கௌரவித்தார்.

அப்போது மாணவிகளை பேச்சை பாராட்டிய அமைச்சர், அடுத்த தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்கும் போது எனக்காக பிரச்சாரம் செய்ய வேண்டி இருக்கும் என தெரிவித்தார். இதனை அடுத்து மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை அமைச்சர் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.