வழக்கறிஞர்கள் செந்தில் குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.
ஆனால், 2 மாதங்களாக அந்த பரிந்துரை மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்த நிலையில் கடந்த மே மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து மத்திய சட்ட அமைச்சகம் கொலிஜியம் பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.
இதையடுத்து, பரிந்துரையை ஏற்றுக் கொண்டு நான்கு பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மேலும் இருவரை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி வழக்கறிஞர்களாக உள்ள செந்தில்குமார் மற்றும் அருள்முருகன் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற







