“கல்லூரி கனவு” புத்தகம் தொடர்பான வழக்கு தள்ளுபடி

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ள மருத்துவம் தொடர்பான படிப்பில், Bachler of naturopathy and yogic science படிப்பையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சேர்க்கக் கோரிய வழக்கைத்…

“நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ள மருத்துவம் தொடர்பான படிப்பில், Bachler of naturopathy and yogic science படிப்பையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சேர்க்கக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பொன்மனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ். 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறுகிறது எனத் தெரிவித்திருந்தார்.

இத்திட்டத்தின் படி மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நினைவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவுவாரியான பட்டப்படிப்புகள், பட்டப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள வழி வகை செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளைத் திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும் வகையில் உள்ளது எனக் கூறியிருந்தார்.

மேலும், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” நிகழ்ச்சியானது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள அவர், இதில், பிளஸ் 2 முடித்து, உயர்கல்வியில் என்ன என்ன படிப்புகள் என்னென்ன படிப்புகள் உள்ளது என்பது குறித்து விளக்கமாகக் கூறப்பட்டு உள்ளது எனக் கூறியிருந்தார்.

அண்மைச் செய்தி: ‘அலோபதி – ஹோமியோபதி தொடர்பான வழக்கு; ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்’

இதற்காக வழங்கப்பட்டுள்ள ஒரு புத்தக குறிப்பில் மருத்துவம் சார்ந்த படிப்புகள் குறித்து அனைத்து பிரிகளும் உள்ளது. ஆனால், Bachler of naturopathy and yogic science என்ற பாடப்பிரிவு குறித்து எந்த தகவலும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தக குறிப்பில் இல்லை. இந்த படிப்பு வேலை வாய்ப்பு உள்ள படிப்பு, மாணவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும். எனவே, கல்லூரி கனவு புத்தகத்தில் வழங்கப்பட்டுள்ள மருத்துவம் தொடர்பான படிப்பில், Bachler of naturopathy and yogic science படிப்பையும் சேர்க்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத்பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை தொடர்பாக உரிய அதிகாரியிடம் மனு அளித்து நிவாரணம் பெறலாம் எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.