முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜலதோஷம்; தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார் என்று நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சென்னை TTK சாலையில் உள்ள மியூசிக் அகாடமியில் மகுடம் மறுத்த மன்னர்
வி்.பி.ராமன் என்ற சுயசரிதை நூலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த நிலையில், உடல்நிலை
சரியில்லாத காரணத்தால் முதலமைச்சர் காணொளி வாயிலாக நிகழ்ச்சியினை
கண்டுகளித்தார். மாறாக முதலமைச்சர் ஒப்புதல் பேரில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று மகுடம் மறுத்த மன்னர் வி்.பி.ராமன் என்ற சுயசரிதை
நூலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், உச்ச நீதிமன்ற நீதிபதி ராம சுப்ரமணியன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக இயக்குநர் ஶ்ரீநிவாசன், இயக்குனர் மணிரத்தினம், இயக்குனர் செல்வராகவன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரை முருகன், “வி.பி.ராமன் குடும்பத்தை லாயிட்ஸ் கார்னர் என்று சொல்லித்தான் பழக்கம். அதே கோபாலபுரம் பகுதியில் வசிக்க கூடியவர்கள் தான் நாங்கள். நீங்கள் ஒரு கார்னர், நாங்கள் ஒரு கார்னர். எங்கள் குடும்பத்தினர் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு சுயசரிதை
நூலை வி.பி. ராமன் எழுதியிருந்தால், அதனை அப்போது என் தந்தை கலைஞரே வெளியிட்டு இருப்பார். தற்போது அவரது மகன் PS ராமன் எழுதியுள்ளதால், கலைஞரின் மகனான நான் வெளியிடும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.
மகுடம் மறுத்துவராக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் முடிசூடா மன்னனாக இருந்து
மறைந்தவர் VP ராமன். பேரறிஞர் அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் VP ராமன்
சென்றது இந்த நூலில் பதிவிடபட்டு உள்ளது. எம்ஜிஆர் VP இராமனை அவரது கட்சியில் சேர அழைத்த போது, அவர் சேரவில்லை.
அதனை தொடர்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி ராம சுப்ரமணியன் பேசிய போது, ஒரு
மிகப்பெரிய தந்தையை பற்றி, மகன் புத்தகம் எழுத, அதனை தாயார் மேடையில் அமர்ந்து
பார்த்து கொண்டிருப்பது, எந்த இடத்தில் நடந்திருக்க கூடும்.
தந்தையைப் பற்றி 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் பிஎஸ் ராமன் அவரது
வீட்டில் தேடிக் கண்டுபிடித்த பொக்கிஷத்தை பல நாட்கள் படித்த பிறகு அதனை
தொகுத்து இத்தனை கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பலருடைய வரலாறுகளை எழுதும் போது அதில் VP ராமன் வரலாறு
நிச்சயம் இருக்கும். VP ராமன் மர்கஸில் துவங்கி பெரியார் வரை தன் வாழ்க்கையில்
பயணித்து இருக்கிறார். 20 வயதில் சட்ட படிப்பு முடித்து, 22 வயதில்
வழக்கறிஞர், 42 வயதில் அட்வகெட் ஜெனரல் என வாழ்ந்தவர் VP ராமன். ஒன்றை மட்டும்
தெரிந்து கொள்ளுங்கள், வாழ்கையில் எல்லாம் ஒருவருக்கு சீக்கிரம் வருகிறதோ,
அவர்களுக்கு காலம் கூட சீக்கிரம் வந்துவிடுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள
வேண்டும் என அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களிடம்
பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக ஒற்றை தலைமை குறித்து நான் பேச
விரும்பவில்லை எனவும். முதலமைச்சருக்கு ஜலதோஷம், அவர் ஓய்வில் இருக்கிறார்
எனவும் தெரிவித்தார்.
-மணிகண்டன்








