லண்டனில் கோவை மாணவர் உடல் சடலமாக மீட்பு – இந்திய தூதரகத்தின் உதவியை நாடும் பெற்றோர்!

கோவையை சேர்ந்த மாணவர் லண்டனில் மேற்படிப்பிற்காக சென்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முறையான தகவல் ஏதும் பெறபடாத நிலையில், மாணவரின் பெற்றோர் லண்டன் செல்ல இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர். கோவை மாவட்டம் நரசிம்ம…

கோவையை சேர்ந்த மாணவர் லண்டனில் மேற்படிப்பிற்காக சென்ற இடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முறையான தகவல் ஏதும் பெறபடாத நிலையில், மாணவரின் பெற்றோர் லண்டன் செல்ல இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர்.

கோவை மாவட்டம் நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் ஜீவ்நாத். ஜீவ்நாத் கடந்த வருடம் முதுகலைப்படிப்பிற்காக இங்கிலாந்து நாட்டின் ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 21ம் தேதி படுகாயங்களுடன் ஜீவநாத் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவரின் பெற்றோருக்கு இன்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், மாணவர் ஜீவ்நாத் பல்கலைக்கழகம் அருகில் உள்ள கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த  ஜீவநாத்தின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஜீவ்நாத் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து லண்டன் போலீசார் இன்னும் முறையான தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

மாணவர் ஜீவ்நாத் குளிக்க சென்ற போது விபத்து நேரிட்டதா? அல்லது வேறு
ஏதாவது காரணமா? என எந்த தகவலும் முறையாக விளக்கமளிக்கவில்லை என அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மாணவரின் பெற்றோர் தங்களுக்கு முறையாக தகவலை பெற்று தருமாறு இந்திய தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டன் அரசு தரப்பில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் எந்தவொரு செயல்பாடும் மேற்கொள்ளபடாது. இந்நிலையில் ஜீவ்நாத்தின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் லண்டன் செல்ல முடிவெடுத்துள்ளனர், இதன் காரணமாக  ஜீவ்நாத்தின் பெற்றோர் மத்திய  அரசின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த செய்தியை காணொளியாக காண:

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.