முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணம்!

திமுக பிரமுகர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். திமுக செய்தி தொடர்பு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். இன்று அவரது மூன்றாவது மகன் வெங்கட்டின் திருமணம் திருப்பதியில்…

திமுக பிரமுகர் கோவை செல்வராஜ் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.

திமுக செய்தி தொடர்பு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான கோவை செல்வராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். இன்று அவரது மூன்றாவது மகன் வெங்கட்டின் திருமணம் திருப்பதியில் நடந்துள்ளது. திருமணம் முடிந்து வீடு திரும்பும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு கோவையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. செல்வராஜ், கோவை மேற்கு தொகுதியில் 1991ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர், பின்னர் அதிமுகவில் இணைந்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்த அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.