கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறப்பு

சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கொரோனா இரண்டாம் அலை காரணமாக, கடந்த 4 மாதங்களாக கோவை குற்றாலம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 6 ஆம்…

சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது

கொரோனா இரண்டாம் அலை காரணமாக, கடந்த 4 மாதங்களாக கோவை குற்றாலம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 6 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து அதிகம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதிகளில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக அருவியில் நீா்வரத்து அதிகரித்திருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகைக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந் தனா். இப்போது நீர் வரத்து மீண்டும் குறைந்திருப்பதால், கோவை குற்றாலம் இன்று திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என வனத் துறை அறிவித்துள்ளது. பிற மாநிலத்திலிருந்து வருபவர்கள் கட்டாயம் இரண்டு தவனை தடுப்பூசி அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்த சான்று வைத்திருப்பது கட்டாயம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.