முன்பணம் பெற்றுக்கொண்டு படத்தில் நடிக்க வராமல் நடிகர் யோகிபாபு இழுத்தடிப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னைன வளசரவாக்கம், பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஆசீர்(48), இவர் விருகம்பாக்கத்தில் சினிமா நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் யோகி பாபு மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தான் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஜாக் டேனியல்
என்ற படத்தில் நடிக்க நடிகர் யோகி பாபுவுக்கு ரூ.65 லட்சம் சம்பளமாக ரூ.65
லட்சம் பேசிய நிலையில் முன் பணமாக ரூ.20 லட்சம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட நடிகர் யோகி பாபு நடிக்க வராமலும், பணத்தையும் திரும்ப தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







