36.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகல் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுக்குறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை இன்று பிற்பகல் முதல் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த இணையதளத்தில் சென்று Notification- ஐ Click செய்தவுடன் HSE Second Year Exam, March/April 2023 – Scripts Download” என்ற வாசகத்தினை “Click” செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் “Application for Retotaling/Revaluation” என்ற தலைப்பினை Click செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து நாளை பிற்பகல் முதல் ஜூன் 3 ஆம் தேதி மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.

புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர். கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையை பணமாக செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீடு செய்ய ஒரு பாடத்திற்கு 505 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.மறுகூட்டல் செய்ய உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305 ரூபாய் கட்டணமும் மற்ற பாடங்களுக்கு 205 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading