ரஷ்யாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள வாக்னர் ஆயுதக்குழு தலைநகர் மாஸ்கோவை கைப்பற்றுவதில் இருந்து பின்வாங்குவதாக வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ, (Alexander Lukashenko) நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து, வாக்னர் படைகள் பின்வாங்கியுள்ளது. வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஸ் பெலாரசுக்குச் செல்ல உள்ளதாகவும், அவர் மீதான வழக்குகள் கைவிடப்படும் என்றும் கிரெம்ளின் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்ட பதட்டத்தைத் தணிக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அவர் மீதான கிரிமினல் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக அறிவித்தார்.







