வைரலாகும் ”சாக்லேட் வெஜிடபிள் ரைஸ்” – அதிர்ச்சியில் உணவுப் பிரியர்கள்!

சாக்லேட்  குக்கீகளை வைத்து வெஜிடபிள் ரைஸ் தயாரிக்கும் வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மனிதன் உயிர் வாழ்வதற்கான முக்கிய காரணம் உணவு தான்.  மனித நாகரிகம் வளர வளர உணவு முறையும் மாறியுள்ளது.  ஆரம்பத்தில், …

சாக்லேட்  குக்கீகளை வைத்து வெஜிடபிள் ரைஸ் தயாரிக்கும் வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மனிதன் உயிர் வாழ்வதற்கான முக்கிய காரணம் உணவு தான்.  மனித நாகரிகம் வளர வளர உணவு முறையும் மாறியுள்ளது.  ஆரம்பத்தில்,  பழங்கள்,  காய்கறிகள்,  இறைச்சியை பச்சையாக மனிதன் சாப்பிட்டு வந்தான்.  பின்னர் உணவு பதப்படுத்துதல், நெருப்பு வந்த பின்னர் அதை சமைத்தல், அவித்தல் போன்றவற்றைக் செய்ய தொடங்கினான். அதன் பின்னர் தான் வகை வகையாக சமைக்கும் வழக்கம் வந்தது.

இதையும் படியுங்கள் : குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்நிலையில்,  பொது மக்களிடையே வித்தியாசமான உணவுகளின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது.  இதன் விளைவாக,  குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம்,  குலோப் ஜாமுன் பர்கர்,  குலோப் ஜாமுன் சமோசா,   ஐஸ்கிரீம் மசாலா தோசை,  ஐஸ்கிரீம் நூடுல்ஸ்,  ஐஸ்கிரீம் இட்லி போன்ற விநோதமான உணவு கலவைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வகையில், தற்போது சாக்லேட் வெஜிடபிள் ரைஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.  பீட்டர் ஹென்ட்செபீட்டர் என்பவர் சாக்லேட் வெஜிடபிள் ரைஸ் என்னும் வினோதமான உணவை சமைக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.  அதில் அவர் சாக்லேட் குக்கீகளை தண்ணீரில் உருக்கி,  அதில் காய்கறிகள்,  பட்டானி போன்றவற்றை வடித்த சாதத்துடன் கலந்து அந்த சாக்லேட் வெஜிடபிள் ரைஸை தயாரித்தார்.  இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.