தங்கபல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்

சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியா விடை தங்க பல்லக்கில் எழுந்தருளினர். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன்…

சித்திரை திருவிழாவின் எட்டாம் நாள் நிகழ்ச்சியான இன்று மீனாட்சி அம்மன், சொக்கநாதர், பிரியா விடை தங்க பல்லக்கில் எழுந்தருளினர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், ஒவ்வொரு நாளும் மீனாட்சி சொக்கநாதர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

எட்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று மீனாட்சி அம்மன், சொக்கநாதர் மற்றும் பிரியா விடை எனும் அம்மன், கீழ சித்திரை வீதி, தெற்கு ஆவணி மூல வீதி, மேலமாசிவீதி வழியாக தங்கப்பல்லக்கில் உலா வந்தனர். அதனைத் தொடர்ந்து மேலமாசி வீதியில் உள்ள திருஞானசம்பந்தர் ஆதீனம் கட்டுசெட்டி மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

https://twitter.com/news7bakthi/status/1513757531054931968

இதனிடையே அழகர்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா தொடங்கியது. வரும் 14ம் தேதி மாலை தங்கப்பல்லக்கில் இருந்து புறப்படும் கள்ளழகர், 16ம் தேதி அதிகாலை வைகையாற்றில் எழுந்தருளுகிறார். விழாவின் முதல் நாளான இன்று, கள்ளழகர் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார். இதனையொட்டி, அழகர்கோயில் முழுதும் வர்ணங்கள் பூசப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை நியூஸ் 7 தமிழ் மற்றும் நியூஸ் 7 தமிழ் பக்தி யூடியூப் சேனல் நேரடியாக ஒளிபரப்புகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.