சீனாவில் 28 மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி கட்டடம்; வீடியோ காட்சி வெளியீடு!

சீனாவில் 28 மணி நேரத்தில் 10 மாடி கட்டடம் கட்டி முடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. சீனாவின் சாங்ஷா நகரில், பிராட் குரூப் எனும் கட்டுமான நிறுவனம், 10 அடுக்கு மாடி கட்டடத்தை 28 மணி…

சீனாவில் 28 மணி நேரத்தில் 10 மாடி கட்டடம் கட்டி முடித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சாங்ஷா நகரில், பிராட் குரூப் எனும் கட்டுமான நிறுவனம், 10 அடுக்கு மாடி கட்டடத்தை 28 மணி நேரத்தில் கட்டி முடித்திருக்கிறது. PRE-FABRICATION எனும் முறையில், முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கட்டட அமைப்புகளை ஒன்றன் மீது ஒன்றாக இயந்திரங்களின் உதவியோடு அடுக்கப்பட்டு கிட்டதட்ட முழுதாக ஒரு நாள் மற்றும் சில மணி நேரங்களில் தயாராகியிருக்கிறது இந்த கட்டடம்.

இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியதும் முன்னரே தயாரிக்கப்பட்ட சுவர், ஜன்னல் என அனைத்தும் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து நட்டு போல்ட் உதவியுடன் இணைக்கப்பட்டு இந்த கட்டடமானது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டுமானம் முழுமையாக முடிந்ததும் குடிநீர், மின் இணைப்பு ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்த பிராட் குரூப் நிறுவனம் அதை 4 நிமிட வீடியோவாக யூடியூபில் பதிவேற்றியுள்ளது. சமூக வலைதளத்தில் வைரலான இந்த வீடியோ பார்வையாளர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.