இந்திய சீனா எல்லையான சிக்கிம் மாநிலத்தின் ‘நாகு லா” பகுதியில் புதிதாக கான்கிரீட் கட்டுமானங்களை சீனா உருவாக்கி வருகிறது.
கடந்த ஆண்டு இந்திய சீன எல்லையான கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட இரு நாட்டு வீரர்களின் மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது சிக்கிம் மாநிலத்தில் இரு நாட்டு எல்லைப்பகுதியான “நாகு லா” பகுதியில் கான்கிரீட் கட்டுமானங்களை சீனா உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த கட்டுமானங்கள் எளிதில் இந்திய எல்லைப்பகுதியை சீன நாட்டு வீரர்கள் நெருங்கும் வகையில் சர்ச்சைக்குள்ளான பகுதியில் கட்டப்பட்டுவருகிறதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சாலை வசதிகளோடு, நிலையான கட்டுமானத்தை சீனா எழுப்பி வருகிறதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையான எல்லைக்கோட்டுக்கு மிக அருகில் அமைக்கப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கிழக்கு லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச பகுதிகள் இதன் மூலம் கண்காணிக்கப்படும் அபாயமும் மேலெழுந்துள்ளது. மட்டுமல்லாது, கடும் குளிர் காலத்தில் சீன ராணுவத்தினருக்கு உதவவும் இது பயன்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.
முன்னதாக கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் இந்திய தரப்பிலிருந்து 20 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.