விமான நிறுவனங்கள் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரே PNR-ல் பயணம் செய்யும் வகையில், குறைந்தபட்சம் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவருடன் இருக்கை ஒதுக்கப்படுவதை விமான நிறுவனம் உறுதி செய்ய வேண்டும். மேலும் அதற்கான பதிவேடும் பராமரிக்கப்பட வேண்டும்” என்று அந்த உத்தரவு தெரிவித்துள்ளது.
குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாது போனது குறித்து பல பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் புதிய உத்தரவை இன்று வழங்கி உள்ளது.







