முக்கியச் செய்திகள் குற்றம்

மதுரையில் குழந்தை விற்கப்பட்ட விவகாரம்; 4 பேர் கைது

மதுரையில் இரண்டு குழந்தைகள் விற்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை சேக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா 3 குழந்தைகளுடன் மதுரையில் அமைந்துள்ள இதயம் என்ற தனியார் காப்பகத்தில் தங்கியிருந்துள்ளார். அவரது மூன்றாவது குழந்தையான மாணிக்கத்திற்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காப்பகத்தின் நிர்வாகத்தினர், பிறகு ஐஸ்வர்யாவிடம் குழந்தை மாணிக்கம் கொரோனாவினால் இறந்துவிட்டதால் சுடுகாட்டில் புதைத்துவிட்டதாக கூறி ஆவணங்களை அளித்துள்ளனர்.

இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மேற்கொண்ட களஆய்வில், ஆவணங்கள் போலி என தெரியவந்தது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குழந்தை மாணிக்கத்தை கடத்தி விற்பனை செய்ததை கண்டறிந்து, கண்ணன்-பவானி தம்பதியிடமிருந்து குழந்தையை மீட்டனர். இதேபோன்று இரண்டாவதாக மாயமான 2 வயது குழந்தை தனத்தை, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவரிடம் இருந்து போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, குழந்தைகளை வாங்கிய, கண்ணன்- பவானி, சகுபர் சாதிக் – அனீஸ் ராணி ஆகிய தம்பதிகளை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து காப்பகத்தின் இயக்குனரான சிவகுமாரின் மனைவி, ஒருங்கிணைப்பாளர், கலைவாணி, ஊழியர் பிரவீன், மற்றும் முகவர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள காப்பக உரிமையாளர் உள்ளிட்ட இருவரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

Advertisement:

Related posts

மாணவர்களுக்கு விலையில்லா டேட்டா கார்டு: முதல்வர் அதிரடி அறிவிப்பு

Niruban Chakkaaravarthi

ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி : பிரதமர் மோடி

Halley karthi

இறுதிகட்டத்தை அடைந்த தமிழக தேர்தல்: கவனம் ஈர்க்கப்படும் முக்கிய தலைவர்கள்!