அரசு அலுவலகங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாற போதிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தித் துலங்கச் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதைப் பற்றி பலரும் என் கவனத்திற்குக் கோண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீங்கள் இதில் நேடியாகத் தலையிட்டு பணிக்கு நடுவே அவர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் உட்கார்ந்து உணவருந்தவும், நீர் பருகவும் போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புதிதாகக் கட்டப்படுகிற இடங்களிலும், அலுவலகங்களிலும் இத்தகைய வசதிகளை உள்ளடக்கி திட்ட வரைபடத்தில் போதிய இடம் ஒதுக்குவது மிகவும் அவசியம். செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி என் பார்வைக்கு அனுப்புங்கள். மாவட்ட ஆட்சியரகத்தில் மட்டுமல்ல மற்ற அலுவலகங்களிலும் இந்நெறிமுறையை பின்பற்ற வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.