நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும் அதன் மூலம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் எனவும் வழக்கு ஒன்றில் தலைமை
நீதிபதி அமர்வு அறிவுறுத்தியிருந்தது. அவ்வாறு குறித்த நேரத்தில் அமல்படுத்த முடியாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும்
உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில்
தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை
குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், அவ்வாறு அமல்படுத்த முடியாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் அனைத்து துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளதாகவும், உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், அந்த கடித நகலையும் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார். இதை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு ஏற்றுக் கொண்டது.




