வேளாண் நிதி நிலை அறிக்கை: எந்தெந்த திட்டத்திற்கு, எவ்வளவு நிதி?

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையில், எந்தெந்த திட்டத்திற்கு, எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு… 2022 – 23ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு வேளாண் நிதி நிலை…

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதி நிலை அறிக்கையில், எந்தெந்த திட்டத்திற்கு, எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

2022 – 23ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு வேளாண் நிதி நிலை அறிக்கையில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திற்கு 75 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் உடனடி தேவையை பூர்த்தி செய்யும் மாநில வளர்ச்சி திட்டத்திற்கு 71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பயிர்காப்பீட்டு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த 2 ஆயிரத்து 546 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: “தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” – திருமாவளவன் எம்பி

பனை மேம்பாட்டு திட்டத்திற்காக 2 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக, டான்சிட்கோவிற்கு 5 ஆயிரத்து 157 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் 2-ஆம் கட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு பணிகளுக்கு 125.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட் திட்டத்திற்கு 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு திட்டத்திற்கு 132 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.