புதுக்கோட்டை புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்!

நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதலமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் புதுக்கேட்டை புறப்பட்டார்.

செய்தியைக் கேட்க
AI குரல் வடிவம்
0:00 –:–

புதுக்கோட்டையில் ரூ.23 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன பேருந்தி நிலையத்தை திறந்து வைப்பதற்காகவும், ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதலமைச்சர் விஜய் இன்று புதுக்கோட்டை செல்கிறார்.

முதலமைச்சர் விஜய் வருகையை ஒட்டி புதுக்கேட்டை முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கு முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார்.

பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்லும் முதலமைச்சர் விஜய் புதுக்கோட்டையில் 4 கி.மீ தூரம் ரோடு ஷோ மேற்கொள்கிறார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.