ஜப்பானின் ஆய்ச்சி – நகோயாவில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இவ்விளையாட்டுப் போட்டியில் இந்தியா பல பிரிவுகளில் பதக்கங்களை குவித்து வருகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர்களும் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த பேட்மிண்டன் வீராங்கனை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SH6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். வீராங்கனை நித்ய ஶ்ரீயின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலம் சாதனை படைத்துள்ள அவரது வெற்றி, தடைகளைத் தகர்த்து சாதிக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்குப் புதிய ஊக்கத்தை அளிக்கிறது. வீராங்கனை நித்ய ஶ்ரீ, வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று, மேலும் பல புதிய உயரங்களைத் எட்ட வாழ்த்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




