கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இதற்காக அவர் கேரளா பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வளர்ச்சிக்காகவும், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பிற்காக மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் & நிக்கோபார் கொண்டது தென் மண்டல குழு. 29 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் 2021 ஆம் ஆண்டு நவம்பரில் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு சார்பாக அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். செப்டம்பர் 3 ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெறுகின்றது.
அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று மாநில நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்கிறார். தென் மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு குறித்தும் வலியுறுத்தவுள்ளார். முதலமைச்சரான பின் இரண்டாம் முறையாக கேரள மாநிலத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாம் முறையாக பயணம் மேற்கொள்கிறார்.








