கர்னல் பென்னிகுயிக் குடும்பத்தினரை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

முல்லைப் பெரியாறு அணை கட்டித்தந்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் குடும்பத்தினரை சந்தித்தார்.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக  இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள முக.ஸ்டாலின் முல்லை பெரியாறு அனை கட்டிய பென்னி குயிக் குடும்பத்தினரை சந்தித்தார். இந்த சந்தித்த குறித்த புகைப்படத்தை முதல்வர்  தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவுடன் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

முல்லை பெரியாறு அணையைத் தந்து நம் மக்களின் மனங்களில் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களது சிலையை, அவரது சொந்த ஊரான கேம்பர்ளி நகரில் நிறுவியதற்காக, அவரது குடும்பத்தினரும் – செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தைச் சார்ந்தவர்களும் நன்றி தெரிவித்தனர். நேரில் அவர்கள் வைத்த கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றுவோம். ஜான் பென்னிகுவிக் புகழ் வாழ்க”

என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.