நாட்டின் சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்.
முதலமைச்சராக இரண்டாம் முறையாக தேசிய கொடியேற்றும் முதலமைச்சரை இருசக்கர வாகனத்தில் காவல்துறையினர் புடைசூழ அழைத்து வந்தனர்.
முதலமைச்சரை பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு, முப்படை, காவல்துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார்.
காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த விழாவில் கனிமொழி எம்.பி., மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேசியக் கொடியை ஏற்றிவைத்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
இந்த நாட்டிற்கு காந்தி தேசம் என பெயர் சூட்டுமாறு கூறியவர் தந்தை பெரியார் என்று அவர் தெரிவித்தார். மேலும், அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
வருவாய்த்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தாட்கோ உள்ளிட்ட 15 துறைகளின் சார்பில் 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கால்நடை பராமரிப்பு, மகளிர் குழு கடன், விலையில்லா தேய்ப்பு பெட்டி, மீன் வளர்ப்பு என 67,00,922 ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை, வணிக வரித்துறை, கால்நடைத்துறை, சமூக ஆர்வலர்கள் என 250 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செய்தார்.
7 பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மாவட்ட எஸ்.பி சிவ பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.








