சிகாகோவில் சைக்கிள் ஓட்டிய முதலமைச்சர் #MKStalin! வைரலாகும் வீடியோ!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சைக்கிள் ரைடு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து உலக நாடுகளின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

Chief Minister #MKStalin cycled in Chicago! Viral video!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிகாகோவில் சைக்கிள் ரைடு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து உலக நாடுகளின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சில முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதை உறுதி செய்திருந்தார். இதையடுத்து, தமிழ்நாட்டுக்கு மேலும் சில தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார்.

சான் பிரான்ஸிக்கோ சென்ற முதலமைச்சர், அமெரிக்கா வாழ் தமிழர்கள் சிற்பான வரவேற்பளித்திருந்தனர். பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு முதலீட்டாளர்கள், முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

அதன்படி, ஈல்டு என்ஜினியரிங், மைக்ரோ சிப் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் சென்னை, மதுரை, கோவை என முக்கிய நகரங்களில் தொழில் மையங்களை அமைக்க உள்ளன.

பணி ஒருபுறம் இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோவில், ஒரு மாலைநேரப் பொழுதில், முதலமைச்சர் பாட்டுப்பாடி கொண்டே சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.