மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மழைக் காலங்களில் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வருடா வருடம் நடைபெற்று வருகிறது. வெள்ள பாதிப்புகளை…

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

மழைக் காலங்களில் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வருடா வருடம் நடைபெற்று வருகிறது. வெள்ள பாதிப்புகளை தடுக்க பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மணலி புதுநகர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றங்கரை உடையாமல் தடுக்க 15 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் இப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து கனமழை காலங்களில் வெள்ளநீர் தாழ்வான பகுதிகளில் தேங்குவதைத் தடுக்கும் வகையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி விரிவாக எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து மணலி புதுநகர் வடிவடையம்மன் கோயில் தெரு, கார்கில் நகர், கண்ணண் சாலை, தியாகப்பா தெரு, ஏகாம்பரம் தெரு, பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.