ஸ்பெயினில் தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

ஸ்பெயினில் தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.  அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.   தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10…

ஸ்பெயினில் தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.  அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.  

தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 நாள் சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டு தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற ஸ்பெயின் தொழில் அமைப்புகள் மற்றும் ஸ்பெயின் பெரும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் (Tamil Nadu Investors First Port of Call)  கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் மற்றும் கட்டமைப்பு வசதிகள் குறித்து எடுத்துரைத்து,  தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்து உரையாற்றினார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று (ஜன.30) ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள்,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்கள்.  அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார்.  ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் Rafael Mateo முதலமைச்சரை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின்போது,  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.  இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது.  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இதையும் படியுங்கள்:  ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியல் – இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

எனவே இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும்.” என தெரிவித்தார்.  இந்த கலந்தாலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் மின் உற்பத்தி, நீர்சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சி ஆகியவற்றில் முதலீடு செய்திட ஆர்வம் தெரிவித்துள்ளது.

400 கோடி ரூபாய் முதலீட்டில் ரோக்கா நிறுவனம் பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் உறுதியளித்துள்து.  இதனை அடுத்து. வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முதலீட்டு ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.