மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரை புதுநத்தம் சாலையில் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 6 தளங்கள் கொண்ட இந்த நூலகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து ஒவ்வொரு தளமாக சென்று அங்குள்ள சிறப்பு அம்சங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்..
கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு நிகழ்ச்சியில்,அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பொன்முடி மற்றும் HCL நிறுவனர் ஷிவ் நாடார், HCL தலைவர் ரோஷினி நாடார்
உள்பட பலர் பங்கேற்றனர்.







