AI தொழில்நுட்பத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் பேசி நெகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன்!!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் AI தொழில்நுட்பத்தின் வாயிலாக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் பேசி நெகிழ்ந்தனர். மதுரை புதுநத்தம் சாலையில் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் AI தொழில்நுட்பத்தின் வாயிலாக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியுடன் பேசி நெகிழ்ந்தனர்.

மதுரை புதுநத்தம் சாலையில் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 6 தளங்கள் கொண்ட இந்த நூலகத்தில் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தில் குழந்தைகளுக்கான திரையரங்கம் உள்பட அதிநவீன வசதிகள் பல உள்ளன. இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு தளமாக சென்று அங்குள்ள சிறப்பு அம்சங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு AI தொழில்நுட்பத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நேரில் அமர்ந்து பேசும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை பார்வையிட்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் கருணாநிதியுடன் உரையாடினர். இது நெகிழ்ச்சி மிகுந்த தருணமாக அமைந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.