பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்குவதா அல்லது பரிசு தொகுப்பு வழங்குவதா என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் நியாய விலைக் கடைகள் மூலம் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு என்ன வழங்கலாம் என்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
பொங்கல் தொகுப்பு வழங்கும்பட்சத்தில் அதில் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன நிலையில், இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







